ஊராரின் வசை அம்புகள் அவ்வளவு வலிக்கவில்லை
உன் மௌனம் தான் என் நெஞ்சை கீறிவிட்டது
பேசுவார் வாய் அடைக்க முடியாது தான்
ஆனால் ஒரு வார்த்தை கூட மறுக்காத உன் மௌனம்
சரியென்று அர்த்தமில்லை!

என் முயற்சியின் தீவிரத்தையும் என் அன்பின் ஆழத்தையும்
தள்ளி வைப்பது போல் உன் மௌனம் அமைய
இந்த வாழ்க்கை காயங்கள் எப்போதும் இப்படி தான்
ஏற்று கொள்ளும் போது வலி தெரியாது
உதாசீனத்தின் போது தெரியும் அளவிற்கு!

உன் மௌனத்தின் அழகு, என்றாவது ஒரு நாள்
என்னை புண்படுத்த பழகும் என்று
கனவிலும் நான் நினைத்ததில்லை
உடைந்து போன என் இதயத்தை ஓட்ட பார்க்கிறேன்
எப்படி ஒட்டினாலும் அது மறுபடி துடிக்கவில்லை!