ஒரு ஆணின் கண்கள் இத்தனை அழகாய் இருக்கும் என நான் நினைத்ததில்லை,
உன் கண்களை காணும் வரை.

ஒரு ஆணின் கைகள் இத்தனை மென்மையாய் இருக்கும் என நான் நினைத்ததில்லை,
நீ என்னை தழுவும் வரை.

ஒரு ஆணின் இதயம் பூ போல் இருக்கும் என நான் நினைத்ததில்லை,
உன்னை காதலிக்கும் வரை.

ஒரு ஆணின் கோபம் இத்தனை ஆழமாக இருக்கும் என நான் நினைத்ததில்லை,
உன் கண்களின் சீற்றத்தை காணும் வரை.

ஒரு ஆணின் சிரிப்பு இத்தனை சிலிர்ப்பாய் இருக்கும் என நான் நினைத்ததில்லை,
உன் சிரிப்பு என்னை தீண்டும் வரை.

ஒரு ஆணின் குரல் என் உயிரின் இசையை மீட்டும் என நான் நினைத்ததில்லை,
உன் குரலின் இசை கேட்கும் வரை.

ஒரு ஆணை வர்ணித்து கவிதை எழுதுவேன் என் நான் நினைத்ததில்லை,
இன்று உன்னை நினைத்து இதை நான் எழுதும் வரை.

*******

Something inspired by hubby.

Forgive the stereotyping in the poem – I hate stereotyping, but had to do it to write it in the way I wanted it to sound 🙂

Until later 🙂